போப்பையா சரியில்லை எனில் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்கலாமா.. காங்கிரஸிடம் நீதிபதிகள் கேள்வி

இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா சரியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மாட்டார், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றமே சில முறை தீர்ப்பளித்துள்ளது, இதனால் அவரை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவே நீடிப்பார்- வீடியோ

    பெங்களூர்: இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா மீது நம்பிக்கை இல்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க தயாரா என்று காங்கிரஸ் கட்சிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இன்று பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.

    Karnataka floor test: KG Bopaiah is junior, Cant accept him as a pro-tem speaker says, Sibal

    பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.போப்பையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கபில் சிபல் ஆஜராகி உள்ளார். பாஜக சார்பில் முகுல் ரோத்தகி ஆஜராகில் உள்ளார். நேற்று இவர்கள்தான் இரண்டு கட்சிகளுக்கும் சார்பாக வாதாடியது. அதேபோல் நேற்றைய நீதிபதி சிக்ரி அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது. அதேபோல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் இறுதி கட்டத்தில் பாஜக சார்பாக ஆஜரானார்.

    இந்த வழக்கில் பாஜக கட்சியின் வழங்கறிஞர் முகுல் ரோத்தகி முதலில் வாதத்தை தொடங்கினார். போப்பையாவை இடைக்கால சபாநாயகராக நியமித்ததில் தவறில்லை. அவர் நியமனம் முழுக்க முழுக்க விதிகளை பின்பற்றி செய்யப்பட்டது. காங்கிரஸ் இதை எதிர்ப்பதற்கு அவசியமே இல்லை, என்று குறிப்பிட்டார்.

    ஆனால் நேற்று போல் இன்றும் கபில் சிபல் வாதம் ஆதிக்கத்துடன் இருந்தது. அவர் தொடக்கத்திலேயே, போப்பையாவின் கடந்த கால செயல்பாடுகள் சரியில்லை. பாஜகவிற்கு ஆதரவாக பலமுறை செயல்பட்டு இருக்கிறார். அவர் இளமையானவர், அவரைவிட அனுபவம் மிக்கவர்கள் சபையில் பலர் இருக்கிறார்கள். நீதிமன்றமே போப்பையாவை பலமுறை பல வழக்குகளில் கண்டித்து இருக்கிறது. அவர் சரியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மாட்டார், என்று வாதிட்டார்.

    இதையடுத்து சட்டசபையில் பல மூத்த நபர்கள் இருக்கும் போது போப்பையாவை ஏன் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீதிபதிகளே, சபாநாயகர் எல்லா சமயங்களிலும் மூத்த நபராக எல்லா மாநிலங்களிலும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் இதில் விதிகள் மீறப்பட்டு இருப்பதாக கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசினார்கள்.

    மேலும் கே.ஜி. போப்பையா மீது நம்பிக்கை இல்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க தயாரா என்று காங்கிரஸ் கட்சிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+