எஸ்மா சட்டத்தை பிறப்பித்தது கர்நாடக அரசு.. போலீசார் போராட்டம் நடத்தினால் டிஸ்மிஸ்
பெங்களூர்: போலீசாரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒடுக்க கர்நாடகாவில் எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, அதிகப்படியான பணி நேர உளைச்சலை குறைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 4-ல் ஸ்டிரைக்கில் ஈடுபட போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிக போலீசார், குறிப்பாக எஸ்.ஐ அளவுக்கு கீழுள்ள காவலர்கள், மொத்தமாக லீவு எடுத்து போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவல் வெளியாகிய நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், போராட்டத்திட்டத்தை கைவிடுமாறு போலீசாருக்கு கோரிக்கைவிடுத்தார். ஆனால் போலீசார் வேலை நிறுத்த முடிவிலிருந்து வாபஸ் ஆகவில்லை.
இந்நிலையில், கர்நாடக அரசு நேற்று நள்ளிரவில், அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா) பிறப்பித்துள்ளது. கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் இருந்து மக்களை காக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருப்பதால் காவல்துறை இந்த சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது.
எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபடும் போலீசாரை டிஸ்மிஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை இதற்கு எந்த மாதிரியான எதிர்வினையாற்றப்போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications