காவிரி வழக்கு எப்படியானாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும்.. கர்நாடக அமைச்சர் வேண்டுகோள்
பெங்களூர்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் இன்று மதியம், தமிழகம்-கர்நாடகா எல்லை பகுதியான அத்திபெலேயில் ஆய்வு மேற்கொண்டார்.
பரமேஷ்வர் அவர் கர்நாடகா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து இன்று பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் இறுதியாக தமிழக-கர்நாடக எல்லையான அத்திபெலேயில் பாதுகாப்பு பணிகளில் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: கர்நாடகா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் கர்நாடக காவல்துறை, கே.எஸ்.ஆர்.பி, துணை ராணுவ படை 6 பிரிவு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கே.பி.என். பேருந்து எரிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார் அதற்கு கே.பி.என். பேருந்து எரிப்பு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளன்ர். மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 600 க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம் என தெரிவித்தார்.
கடந்த 12ம் தேதி நடந்த கலவரம் வருத்தம் அளிப்பதாகவும், தெரிவித்தார். மேலும், இன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பான, தீர்ப்பு வர உள்ளது அதை தொடர்ந்து நாளை முதல்வர் அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவித்தார். கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், கூடுதலாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், அதுகுறித்து அமைச்சரவை ஆலோசித்து முடிவெடுக்கும். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு பரமேஷ்வர் தெரிவித்தார்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications