கர்நாடகா: மனைவியுடன் லீலை.. நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவன் - பரவிய பகீர் வீடியோ
சிக்கபல்லாபூர்: கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் மனைவியுடன் மறைமுகமாக உறவு வைத்திருந்த நண்பனின் கழுத்தை அறுத்து கணவன் ரத்தம் குடித்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி அருகே பட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜ்ய. இவரது மனைவி மாலாவுக்கும் நண்பன் மாரேஷுக்கும் மறைமுகமான உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகாத உறவு விஜய்க்கு தெரிய வர கடும் கோபம் அடைந்துள்ளார். மாலாவையும் மாரேஷையும் விஜய் கண்டித்தும் இருவரும் தங்களது தகாத உறவை கைவிடவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாரேஷுக்கு பாடம் கற்றுத் தர நினைத்த விஜய் தமது மற்றொரு நண்பர் ஜான் உதவியுடன் மாரேஷை வனப்பகுதி ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு மாரேஷை நன்கு மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் மாரேஷின் கழுத்தை அறுத்து ரத்தத்தை விஜய் குடித்துள்ளார். மாரேஷின் கழுத்தை அறுத்து ரத்தத்தை விஜய் குடிக்கும் காட்சியை ஜான் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். பின்னர் மாரேஷை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு விஜய், ஜான் வீடு திரும்பினர்.

இதனிடையே வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரேஷ், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாரேஷ் அளித்த புகாரின் பேரில் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். மாரேஷின் கழுத்தை அறுத்து விஜய் ரத்தம் குடிக்கும் வீடியோவை ஜான் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications