பெண்குழந்தையால் கெட்ட நேரம் வரப்போகுது... ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கொன்ற கொடூரன்
பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் கொன்று மூச்சை நிறுத்திய கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோதிடரின் ஆலோசனையை கேட்டு இப்படி நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கமகளூரு: பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்தும் நெல் மணிகளை வாயில் போட்டும் கொன்ற காலம் உள்ளது. பெண் குழந்தை என்றாலே மகாலட்சுமியின் அம்சம் என்று இப்போது போற்றுகின்றனர். ஆனால் இந்த காலத்தில் பெண் குழந்தையால் கெட்ட நேரம் வரப்போகிறது என்று சொன்ன ஜோதிடரின் பேச்சைக் கேட்டு கொன்று வீசியுள்ளார் ஒரு கொடூர தந்தை. கர்நாடகாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த காலத்திலும் இப்படியா என்று யோசிக்கத் தோன்றுகிறதா மேற்கொண்டு படியுங்கள்.
மூட நம்பிக்கையால் பிஞ்சு மகளைக் கொன்ற அந்த கொடூர நபரின் பெயர் மஞ்சுநாதா என்பதாகும். சிக்மகளூருவை அடுத்த புச்சனஹள்ளியைச் சேர்ந்த
அவரது மனைவி பெயர் சுசித்ரா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்தது.
குழந்தைக்காக கடவுளிடம் வரம் கேட்டு தவமிருந்தனர். அதன் பயனாக சுசித்ரா கர்ப்பமானார். மகிழ்ச்சியில் திளைத்தார் மஞ்சுநாதா. வாரிசு பிறக்கப்போகிறது என்று சந்தோசத்தில் துள்ளிக்குதித்தார். மகன் பிறப்பான் என்று நம்பினார்.

பெண்ணாக பிறந்து விட்டதே
பத்து மாதம் கழித்து சுசித்ராவிற்கு பிறந்ததோ பெண் குழந்தை. இதனால் அதிர்ச்சியடைந்தார். யாருடனும் பேசாமல் அமைதியானர். தவமாய் தவமிருந்து பெற்ற பெண் குழந்தையை சீராட்டி வளர்த்தார் சுசித்ரா. அந்த குழந்தைக்கு நிகரிகா என்று பெயர் சூட்டினார். ஆனால் அந்த குழந்தையை தொட்டு தூக்கக் கூட இல்லை மஞ்சுநாதா.

ஜோதிடரிடம் ஆலோசனை
ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்த தனக்கு பெண் பிறந்து விட்டதே என்று கூறி மனைவியிடம் புலம்பினார். அக்கம் பக்கத்தினரிடமும் கூறி அழுதாராம். தனக்கு வாரிசு பிறக்குமா பிறக்காதா என்று ஒரு ஜோதிடரிடம் போய் ஜாதகத்தைக் காட்டினார்.

மனைவியிடம் சண்டை
அந்த ஜோதிடரோ, பெண் குழந்தையால் கெடுதல் நடக்கப்போகிறது என்று கூறி பீதியை கிளப்பினார். அதனால் குழப்பமடைந்த மஞ்சுநாதா, வீட்டிற்கு வந்து மனைவியிடம் வந்து சண்டை போட்டார். வழக்கம் போல போடும் சண்டைதான் என்று பேசாமல் விட்டு விட்டார் சுசித்ரா.

கொன்ற கொடூரன்
ஜோதிடர் சொன்னதைக் கேட்டு மண்டை குடைச்சலால் பாதிக்கப்பட்ட மஞ்சுநாதா குழந்தையை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று திட்டம் போட்டார். வீட்டு வேலையில் எல்லாரும் பிசியாக இருந்த போது தொட்டிலில் இருந்த குழந்தையின் கழுத்தை நெரித்தார். மூக்கில் ரத்தம் வழிய மூச்சை விட்டது குழந்தை.

மூச்சை நிறுத்திய தந்தை
குழந்தை ரொம்ப நேரமாக தூங்குகிறதே என்று தொட்டிலை எட்டிப்பார்த்த சுசித்ரா அதிர்ச்சியில் அலறினார். காரணம் குழந்தையில் மூச்சு நின்று போயிருந்தது. சுசித்ராவின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, பயந்து போன மஞ்சுநாதா வீட்டை விட்டு ஓடிப்போனார்.
குழந்தையை கொடூரமாகக் கொன்ற கணவன் மீது சுசித்ரா புகார் அளித்தார்.

மூட நம்பிக்கையால் கொலை
சிக்மகளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தையை கொன்று விட்டு தலைமறைவான மஞ்சுநாதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை மூட நம்பிக்கையால் பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் சிக்மகளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications