காவிரி விசாரணை: சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகா அமைச்சர் பாட்டீல்... எட்டிப் பார்க்காத தமிழக அமைச்சர்கள்
டெல்லி: காவிரி நதிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலும் கலந்து கொண்டார். ஆனால் தமிழக அமைச்சர்கள் எவருமே இந்த உச்சநீதிமன்ற விசாரணையை எட்டிகூட பார்க்கவில்லை.
50 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் 15,000 கன அடி நீரையும் பின்னர் 12,000 கன அடி நீரையும் செப்டம்பர் 20-ந் தேதி வரை திறந்துவிட உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடகாவோ செப்டம்பர் 18-ந் தேதி இரவே தமிழகத்துக்கான நீர் திறப்பை நிறுத்திவிட்டது. இதனிடையே காவிரி மேற்பார்வைக் குழுவும் தமிழகத்துக்கு நாளை முதல் 3,000 கன அடி நீரை 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கலந்து கொண்டார்.
உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணை நடைபெறும் போதெல்லாம் கர்நாடகா அரசு கவனம் செலுத்தி அமைச்சரைக் கூட அனுப்பி வைக்கிறது. ஆனால் நீரைப் பெற்றுத்தரவேண்டிய நிலையில் இருக்கும் தமிழக அரசோ எந்த ஒரு அமைச்சரையும் அனுப்புவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications