For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.2.5 கோடி செலவு செய்து தனது வீட்டை புதுப்பித்த அமைச்சர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: அமைச்சர் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை ரூ.2.5 கோடி செலவிட்டு புதுப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று ஒராண்டு காலம் ஆகிறது. இந்நிலையில் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கிவருகிறது.

மாநிலத்தில் வறட்சி நிலவும்போது எம்.எல்.ஏக்கள் குழு வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் மகாதேவப்பா தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ரூ.2,5 கோடி செலவில் புதுப்பித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அமைச்சருக்காக பெங்களூரில் ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவின் பல இடங்களை இடித்து, மாற்றியமைத்து ரூ.2.5 கோடியை செலவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு நிதியை இப்படி விரையம் செய்த அமைச்சருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர் நானய்யா கூறுகையி்ல்,

பெங்களூரிலுள்ள சாலைகளை கூட புதுப்பிக்காத அரசு, அமைச்சரின் பங்களாவுக்காக ரூ.2.5 கோடியை செலவிட்டுள்ளது சரியில்லை. இப்போது அமைச்சரின் பங்களாவை பார்த்தால் ஏதோ தனியார் ரெசார்ட்டை பார்ப்பது போல உள்ளது என்றார்.

English summary
Chief Minister Siddaramaiah led government is courting one controversy after another. Dr HC Mahadevappa, the Public Works Minister (PWD) minister is now facing the wrath of the people for spending over Rs 2.5 crore on the renovation of his official bungalow in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X