கர்நாடக அரசியலில் பரபரப்பு: அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் திட்டம்
பெங்களூர்: சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மதசார்பற்ற ஜனதாதளம் திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சியான பாஜகவிடமும் இதற்காக ஆதரவு கேட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் செயல்பட்டுவரும் ஊழல் தடுப்பு அமைப்பான லோக்-ஆயுக்தா நீதிபதியான பாஸ்கர் ராவ் மகன், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகுவோரிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. நீதிபதியை பதவி விலக கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அரசு இந்த விவகாரத்தில் தலையிட மறுக்கிறது. சிறப்பு விசாரணை குழு இவ்விவகாரம் பற்றி விசாரணை நடத்தும் என்று அறிவித்துவிட்டது.

இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளாகவே, லோக்-ஆயுக்தாவில் ஊழல் நடைபெற்றும் கூட, அதுகுறித்து அரசு வெளியே காட்டிக்கொள்ளாமல், தற்போது முதல்வருக்கு எதிரான ஒரு புகாரை விசாரிக்க தொடங்கும்போதுதான், அரசே நெருக்கடி தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதையடுத்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன பாஜக மற்றும் மஜத ஆகிய எதிர்க்கட்சிகள். தற்போது பெல்காமில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், வரும் திங்கள்முதல் பெங்களூர் சட்டசபை கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மஜத சட்டசபை கட்சி குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான பாஜகவிடமும் ஆதரவு கேட்க உள்ளார் குமாரசாமி. இதற்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரை, குமாரசாமி சந்திக்க உள்ளார். இந்த திடீர் நடவடிக்கைகள், கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடகாவில், காங்கிரஸ் அரசுக்கு அறுதி பெரும்பான்மை பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications