காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா பாஜக கடும் எதிர்ப்பு
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்வதற்கு கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான மத்திய அரசு மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தற்போது அம்மாநில பாரதிய ஜனதா கட்சியும் கடுமையாக எதிர்க்கிறது. இது குறித்து கர்நாடகா பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளதாவது:
கர்நாடகாவின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். இந்த வாரியம் அமைப்பது குறித்து வல்லுநர்கள் கருத்தை நாங்கள் கேட்டுள்ளோம்.
மாநில நலன் கருதி இந்த வாரியம் அமைக்கக் கூடாது. இதில் அரசியல் எதுவும் இல்லை. அதே நேரத்தில் மாநில நலனே எங்களுக்கு முக்கியம்.
இவ்வாறு பிரஹலாத் ஜோஷி கூறினார்.












Click it and Unblock the Notifications