தினமும் 350 கி.மீ பயணித்து அலுவலகம் வரும் கர்நாடகா அமைச்சர் ரேவண்ணா.. குமாரசாமியின் அண்ணன்தான்
பெங்களூர்: கர்நாடக அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, தினமும் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்து, பெங்களூரிலுள்ள அலுவலகம் வந்து செல்கிறார்.
முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான எச்.டி.தேவகவுடாவின் மூத்த மகன்தான் இந்த ரேவண்ணா. இவரது தம்பியும், மஜத மாநில தலைவருமான எச்.டி.குமாரசாமிதான் இப்போது, கர்நாடக முதல்வராக உள்ளார்.
ரேவண்ணாவிற்கு பவர்புல்லான பொதுப் பணித்துறை இலாகா கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் நீண்ட பயணம்
இருப்பினும், ரேவண்ணா தினமும், தனது தொகுதியான ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிபுராவில் இருந்து பெங்களூருக்கு காரில் வந்து மீண்டும், அங்கு திரும்புகிறார். மறுநாள் மீண்டும் பெங்களூர் வருகிறார். பெங்களூர்-ஹொலேநரசிபுரா நடுவே அப் அன்டு டவுண், அதாவது போக்குவரத்து தூரம் என்பது சுமார் 350 கி.மீ. இவ்வளவு தூரத்தை தினமும் அவர் தினமும் பயணித்துக்கொண்டுள்ளார்.

ஜோசியர் சொல்படி
ரேவண்ணா ஜாதகம், நல்ல நேரம், வாஸ்து போன்றவற்றில் மிக, மிக, மிக நம்பிக்கை உள்ளவர். வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்றாலும் நல்ல நேரம் பார்த்துதான் கிளம்புவார். தேவகவுடாவும் அப்படித்தான் என்றபோதிலும், ரேவண்ணா அளவுக்கு கிடையாது. இருப்பினும் கொஞ்சமே சீட் வென்றாலும் தங்கள் குடும்பத்திற்கு பிரதமர் பதவி, முதல்வர் பதவி, நல்ல அமைச்சர் பதவிகள் தேடி வர காரணம் பூஜை, ஜோதிடங்கள்தான் என்பதில் ரேவண்ணாவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

வெளியான செய்திகள்
சட்டசபையில் பேச வேண்டும் என்றாலும் கூட ராகு காலமாக இருந்தால் ரேவண்ணா பேசமாட்டார். அந்த நேரத்தில் நைசாக வெளியே சென்றுவிடுவார். எனவே, ரேவண்ணா ஜோதிடர் அறிவுரைப்படிதான் ஹொலேநரசிபுராவில் இருந்து தினமும் பெங்களூர் வந்து செல்கிறார் என்று கன்னட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வீடு கிடைக்கவில்லையாம்
இதுகுறித்து ரேவண்ணாவிடம் கேட்டபோது, ஜோதிடர் கூறியதற்காகவெல்லாம் இல்லப்பா.. அமைச்சருக்கான வீடு பெங்களூரில் எனக்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை. அதனால்தான் ஹொலேநரசிபுராவில் இருந்து இங்கே வருகிறேன் என்கிறார். ஆனால், பெங்களூரின் பத்மநாபநகரில் தேவகவுடா வீடு உள்ளது. ஜேபிநகரில் சகோதரர் குமாரசாமி வீடு உள்ளது. எனவே அரசு வீடு கிடைக்கவில்லை என்பதற்காக தினமும் 350 கி.மீ பயணிப்பதாக ரேவண்ணா கூறுவதை யாரும் நம்ப தயாராக இல்லை.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications