ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்.. கர்நாடக சட்டசபை தேர்தலில் 70% வாக்குப்பதிவு! 15ல் வாக்கு எண்ணிக்கை
1985ல் ஜனதாதளத்தின் ராமகிருஷ்ணஹெக்டே அரசுக்கு பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தல் பெரும் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நிறைவடைந்தது. வரும் 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டதால் ராஜராஜேஸ்வரி நகரிலும், இன்று தேர்தல் நடைபெறவில்லை.
காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

காலை 10 மணி நிலவரப்படி, 10.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, அது 36.9 சதவீதமாக இருந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 61.53 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் உள்ள இறுதி கட்ட நிலவரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த பிறகு இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 35 வருடங்களுக்கு பிறகு அப்போதுதான் அதிகபட்சமாக மக்கள் வாக்களித்தனர்.
பெங்களூரை பொறுத்தளவில், மத்திய பகுதியில் 40 சதவீதம், வடக்கு பெங்களூரில் 39 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, பொம்மனஹள்ளி உள்ளிட்ட தெற்கு பகுதிகளை உள்ளடக்கிய தென் பெங்களூரில் 40 சதவீதமாக இருந்தது. பெங்களூர் அர்பன் எனப்படும் நகர்ப்புற மண்டலத்தில் வரும் தொகுதிகளில் 42 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.
தென் கனரா மாவட்டத்தில், 61 சதவீதம், பெலகாவி 58%, பாகல்கோட்டை 55%, விஜயபுரா 48%, கலபுருகி 45%, பீதர் 42%, பெங்களூர் ஊரகம் 62%, ராம்நகர் 65%,
மண்டியா 60%, ஹாசன் 61%, மைசூர் 52%, கதக் 53%, உடுப்பி 62% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
அதிகப்படியாக வாக்குப்பதிவு பதிவானால் அது ஆட்சிக்கு எதிரான அலையாக பார்க்கப்படும் என்பதால் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றால் அது காங்கிரசுக்கு கலக்கமாக முடியும். சுமார் 75 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான வாக்குப்பதிவு புள்ளி விவர தகவல் இன்று இரவு அல்லது நாளை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.
இத் தேர்தலில் மொத்தம் 2,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர். 4.98 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் சுமார் 2.44 கோடியாகும். மொத்தம் 4,552 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். மாநிலம் முழுக்க 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 3.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியாற்றினர்.
1985ல் ஜனதாதளத்தின் ராமகிருஷ்ணஹெக்டே அரசுக்கு பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. அந்த நம்பிக்கையை உடைப்பது என்பதில் உறுதியாக இருந்தார், இப்போதைய முதல்வரான சித்தராமையா.
தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகவும், பாஜக 2வது இடத்தையும் பிடிக்கும் என்றும், மஜத கிங் மேக்கராக உருவாகலாம் என்றும் கூறியிருந்தன.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வரும் 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டசபை தேர்தல் பார்க்கப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications