சுப்ரீம்கோர்ட் என்ன சொன்னாலும் கவலை இல்லை.. தண்ணீர் தர முடியாது - சித்தராமையா திமிர் பேச்சு #cauver

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தமிழகத்திற்கு எங்களால் தண்ணீர் தர முடியாது. இதற்காக சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கூட கவலை இல்லை. சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

சுப்ரீம் கோர்ட்டை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதைச் செய்து வருகிறது கர்நாடக அரசு. அதற்கு தற்போது ஆதரவு தெரிவிக்கும் வகையில் தானும் நடக்க ஆரம்பித்து விட்டது மத்திய அரசு. இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

Karnataka will not give water to Tamil Nadu, says Siddaramaiah

பெங்களூரில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், கர்நாடகத்தில் உள்ள அணைகளில் 24 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது. இது எங்களது குடிநீர்த் தேவைக்கு மட்டுமே போதுமானது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. பொதுமக்கள் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே தற்போது தண்ணீர் திறந்து விட்டுள்ளோம்.

காவிரியில் 24 டி.எம்.சி.க்கு குறைவாக நீர் இருப்பு இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டாலும் கூட திறக்க முடியாது. இதனால் என்ன விளைவு ஏற்பட்டாலும் அதை சந்திக்கத் தயாராக உள்ளோம். ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கூட சந்திக்கத் தயார் என்று கூறினார் சித்தராமையா.

கர்நாடக முதல்வர் இப்படி சுப்ரீம் கோர்ட்டை சற்றும் மதிக்காமல் மேலும் மேலும் திமிராக பேசியுள்ளது அனைவரையும் அதிர வைப்பதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட் என்ன செய்யப் போகிறது.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+