Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரவாத தாக்குதல்- அனைத்து கட்சி கூட்டத்துக்கு வராமல் தேர்தல் பிரசாரம்-மோடி மீது கார்கே பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான டெல்லி அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காமல் பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கூட்டிய இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொன்டன. அத்துடன், மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதி அளித்தோம்.

Kharge

ஆனால் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிதான் பங்கேற்கவில்லை. இதற்காக மோடி வெட்கம்தான் பட வேண்டும். இந்த தேசத்தின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சூழலில் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடியால் டெல்லிக்கு வர முடியாதா? பீகாருக்கும் டெல்லிக்கும் அப்படி என்ன தூரம் இருக்கிறது? நீங்கள்தான் 56 இஞ்ச் மார்பு வைத்திருப்பவராயிற்றே.. இதுதான் பாஜகவின், பிரதமர் மோடியின் அணுகுமுறையா?

ராஜஸ்தானில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திகாராம், கோவிலுக்குச் சென்றார். அவர் தலித் என்பதால், அவர் வழிபாடு நடத்திய கோவிலை கழுவி சுத்தம் செய்துள்ளனர். இதுதான் பாஜக இந்த நாட்டுக்கு கற்பித்துத் தரும் பாடமா? நீங்கள்தானே இந்துக்களைப் பற்றி பேசுகிறீர்கள்.. பிறகு ஏன் ஒரு இந்து கோவிலுக்குள் சென்றதாலேயே தீட்டு என அந்த கோவிலை கழுவி விடுகிறீர்கள்?

2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு பாஜக வந்த போது அமித்ஷாவும் இதர பாஜக தலைவர்களும் தலித்துகளின் வீடுகளுக்கு போய் சாப்பிட்டார்கள். இப்போதும் இந்த நாட்டின் தலித்துகள் நிலைமை அப்படியேதான் இருக்கிறது.. அப்படியானால் இந்துக்களிடையே எப்படி ஒற்றுமை இருக்க முடியும்? இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

Congress President and Rajya Sabha Opposition Leader Mallikarjun Kharge strongly condemned Prime Minister Narendra Modi for choosing to campaign in Bihar instead of attending the all-party meeting in Delhi regarding the Jammu & Kashmir terror attack.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+