போருக்கு தயாராகிறதா இந்தியா...? காஷ்மீர் மருத்துவமனைகள் மீது செஞ்சிலுவை சின்னம்
Recommended Video

ஜம்மு காஷ்மீர்: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீர் மருத்துவமனைகளின் மீது செஞ்சிலுவை சின்னம் வரையப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீா் ரஜோரியில் பாகிஸ்தான் போர் விமானம் அத்துமீறி நுழைந்ததால் இந்தியப் பாதுகாப்பு படை பாகிஸ்தான் விமானத்தை சுட்டுத் தள்ளியது. இதனைத் தொடா்ந்து பாகிஸ்தானில் உள்நாட்டு,வெளிநாட்டு விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹிரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

மத்திய அரசு
முதலில் தாக்குதலை மறுத்த மத்திய அரசு... பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி அபி நந்தன் என்பவர் சிக்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

மத்திய அரசு ஆலோசனை
பாதுகாப்புத் துறை அமைச்சருடன் முப்படை தளபதிகளும், பிரதமா் மோடியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலும் சந்தித்து பேசினர். போர் பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ நிலைகளும் தயாராக உள்ளன.

மருத்துவமனைகள்
இந்த சூழ்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை குறிக்கும் விதமாக மருத்துவமனைகளின் மேற்தளத்தில் ரெட் கிராஸ் சின்னம் வரையப்பட்டுள்ளது.

ரெட் கிராஸ் சின்னம்
உள்ளூர்வாசிகளே சிலர் களத்தில் இறங்கி இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். போர் பதற்றம் குறைந்து விடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வரும் இவ்வேளையில் காஷ்மீர் மருத்துவமனைகளின் மீது ரெட் கிராஸ் சின்னம் வரையப்பட்டிருப்பது அசாதாரண சூழலை இன்னும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications