மத்திய அரசு அதிரடி.. நீக்கப்பட்டது சட்டப்பிரிவு 370.. காஷ்மீரில் இனி என்ன எல்லாம் நடக்கும் தெரியுமா!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீரில் நிறைய அதிரடி மாற்றங்கள் வரும் காலங்களில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நிறைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகளுக்கு பிறகுதான் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிற மாநிலங்களைப் போல அல்லாமல் சில சிறப்பு உரிமைகள் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டன. அரசியல் சாசனப்பிரிவுதான் 370 இந்த சிறப்பு உரிமைகளை காஷ்மீருக்கு வழங்கி வருகிறது.
தற்போது இதை மத்திய அரசு மொத்தமாக நீக்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்.
ஜம்மு காஷ்மீருக்கு தனி கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது.
இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கு பொருந்தும்.
மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியசல் சாசனத்தின் 370-வது விதி. ஆனால் இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது என்று நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இனி அனைத்து துறை சார்ந்த மீது மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்கு கொண்டு வர முடியும்.
இனி வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அந்த ஆண்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியும். முன்பு இந்த அதிகாரம் கிடையாது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications