கெஜ்ரிவால் தர்ணா: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனது அமைச்சர்கள் கூறுவதை கேட்காத டெல்லி போலீசாரை கண்டித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து இரண்டு போலீசாரை கட்டாய விடுப்பில் அனுப்பிய பிறகே அவர் தர்ணாவை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், முக்கிய பதவியை வகித்துக் கொண்டு சட்டத்தை மீறிய கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கறிஞர் என். ராஜாராம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக கூட போலீசார் எப்படி அனுமதித்தனர் என்று கேள்வி எழுப்பியது. கலைந்து போகுமாறு கூறியும் செல்ல மறுத்த கூட்டம் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்று மேலும் கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications