பாக்கெட்டில் 500 ரூவா, அப்புறம் ஒரு “ஓட்டை” ஜீப், இதுதான் கெஜ்ரிவால் சொத்து!!
வாரணாசி: தன்னிடம் வெறும் 500 ரூபாய் பணமும், ஜீப்பும் மட்டுமே உள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது பெற்றொர்கள் புடை சூழவும், முக்கிய தலைவர்களின் ஆதரவுடனும், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடனும் பேரணியாக சென்றார்.

முன்னதாக பேரணியை துவங்குவதற்கு முன் அங்கு திரண்டிருந்த கூட்டத்தின் முன் அவர் பேசிய அவர், " எனது பாக்கெட்டில் 500 ரூபாய் பணம் மட்டுமே உள்ளது. தேர்தலில் பலப்பரீட்சை நடத்த கூட என்னிடம் பணமில்லை. இந்த பழைய ஜீப்பில் சென்றே நான் எனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளேன் " என்று அவர் கூறினார்.
மேலும், " நாளை இங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள மோடி ஹெலிகாப்டரில் வருவார். அவ்வாறு வருபவரிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவரை ஹெலிகாப்டரில் மட்டும் தான் பார்க்க முடியும்" என்று கெஜ்ரிவால் கூறினார்.












Click it and Unblock the Notifications