ஊழலில் உதித்த கட்சிகள்தான் காங்கிரஸும், பாஜகவும்: கெஜ்ரிவால்
டெல்லி: சோம்நாத் பார்தி ஒரு தவறும் செய்யாதவர். அவர் அப்பாவி. அப்படிப்பட்டவரை எப்படி அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவது என்று கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆம் ஆத்மி ஆட்சி டெல்லியில் அமைந்து ஒரு மாதமாகி விட்டது. இந்த நிலையில் ஆஜ் தக் டிவிக்கு பேட்டி அளித்துள்ளார் கெஜ்ரிவால்.
அதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேசியுள்ளார். அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதகிள்...

அரசியல் சாசனத்திற்குப் புறம்பானவன் அல்ல நான்
நான் அரசியல் சாசனத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்படுவதாக பலரும் குறைபடுகிறார்கள். அரசியல் சாசனத்தை மதிப்பவன் நான். அதற்கு நான் மிர்டடல் அல்ல. சமத்துவம், பாதுகாப்புடன் வாழ்வது ஆகியவை நமது அடிப்படை உரிமைகள். இதைத்தான் நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அரசியல் சாசனமானது, அமைச்சரையோ அல்லது பிரதமரையோ மட்டும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதே எனது கருத்தாகும்.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸார் இன்னும் கடமையுணர்வுடன் செயல்பட வேண்டும். காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம். அதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம்.

குற்றங்கள் குறைந்து விட்டன
டெல்லியில் கடந்த 30 நாட்களில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. மாற்றத்திற்கான காற்று வீசத் தொடங்கி விட்டது.

என் போராட்டத்தில் என்ன தவறு
டெல்லி ரயில் பவன் முன்பு நான் நடத்திய போராட்டம் நியாயமானதே. அதை வைத்து என்னை பலவீனமான முதல்வர் என்று கருதக் கூடாது. வசதிகளையும், சவுகரியங்களையும் தியாகம் செய்யக் கூடியவன்தான் பலமானவன். அந்த வகையில் நானும் பலவான்தான்.

ஊழலில் உதித்த கட்சிகள்தான் காங்கிரஸும், பாஜகவும்
காங்கிரஸும் சரி, பாஜகவும் ஊழலை அடிப்படையாகக் கொண்டவை. ஊழலுடன் கை கோர்த்துச் செல்லும் கட்சிகள் அவை. இரு கட்சிகளுமே முதலாளித்துவத்தைத்தான் ஆதரிக்கின்றன.

தூய அரசியலில் விளைந்த நன்முத்து ஆம் ஆத்மி
ஆனால் நமது நாட்டை தூய்மையான அரசியலுக்கு இட்டுச் செல்வதற்காக உதித்த கட்சிதான் ஆம் ஆத்மி. தூய்மையான, கெளரவமான அரசியலைத் தர வேண்டும் என்பதற்காகவே இதைத் தொடங்கினோம்.

மக்கள் ஆட்சியைக் கொண்டு வருவோம்
நாங்கள் மக்களின் ஆட்சியைக் கொண்டு வருவோம். மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துத்தான் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்.

சோம்நாத் பார்தி அப்பாவி...
சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யாதவர். தவறான செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுங்கள் என்றுதான் காவல்துறையினரை அவர் வற்புறுத்தினார். அவருக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லை. எனது அமைச்சரவையிலிருந்து அவரை நீக்க மாட்டேன். அவர் தொடர்வார்.

ஆனால் வாயைக் கட்ட வேண்டும்
ஆனால் சோம்நாத் பார்தி அமைதி காக்க வேண்டும். எந்தத் தவறான வார்த்தையயும் உபயோகிக்கக் கூடாது.

நிறைய சாதித்து விட்டோம்
கடந்த 30 நாட்களில் எங்களது அரசு நிறைய சாதித்துள்ளது. எந்த அரசும் இப்படி செயல்பட்டதில்லை. விஐபி கலாச்சாரத்தை முழுமையாக நிறுத்தி விட்டோம். கார்களுக்கு முன்பு எஸ்கார்ட் போவதில்லை. சைரன் ஒலிப்பதில்லை. மின்சாரக் கட்டணத்தைக் குறைத்துள்ளோம். குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார் கெஜ்ரிவால்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications