மத்திய அரசுப் பணியிலி்ருந்து விருப்ப ஓய்வு பெற்றார் கெஜ்ரிவால் மனைவி
டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தான் பார்த்து வந்த வருமான வரித்துறை ஆணையர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
அவர் வருமான வரி முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ஆணையராக கடைசியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் விருப்ப ஓய்வு கோரி நோட்டீஸ் கொடுத்திருந்தார். தற்போது அவருக்கு விருப்ப ஓய்வு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான உத்தரவை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், ஜூலை 15ம் தேதி முதல் சுனிதாவுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த நோட்டீஸைப் பரிசீலித்து அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் ஜூலை 15 முதல் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு பெற்ற ஒரு வருட காலத்திற்கு வர்த்தக ரீதியிலான பலன் தரும் எந்த வேலையிலும் அவர் சேரக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி சேருவதாக இருந்தால் முறைப்படி மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 20 வருடமாக மத்திய அரசுப் பணியில் இருந்து வந்தார் கெஜ்ரிவால். விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதால் அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பிற பலன்கள் முறைப்படி கிடைக்கும்.
கெஜ்ரிவாலுக்கு எதிராக தன்னை மத்திய அரசு பழிவாங்கலாம் என்ற அச்சத்தில்தான் சுனிதா விருப்ப ஓய்வு பெற்று விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் கடந்த 1994ம் ஆண்டு மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். 1995ல் அவர் ஐஆர்எஸ் எனப்படும் வருவாய்ப் பணியில் இணைந்தார்.
இவரது கணவர் கெஜ்ரிவாலும் கூட ஒரு ஐஆர்எஸ் அதிகாரிதான். இவர் அன்னா ஹஸாரே இயக்கத்தில் இணைவதற்கு முன்பே தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications