ராமராஜ்யம் நடக்கவில்லை… அரசு பாதுகாப்பை கேஜ்ரிவால் மறுக்கக் கூடாது: ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கு வீடு, கார், போலீஸ் பாதுகாப்பு போன்ற எவ்வித அரசு சலுகைகளும் தேவையில்லை என்று கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகின.
அவரது இந்த கருத்துக்கு ஆன்மிக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு அளிக்கும் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவிக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், 'லட்சியத்துக்கும், நடைமுறைக்குமான இடைவெளியில் உள்ள நிலைப்பாட்டை அரவிந்த் கேஜ்ரிவால் தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு மாநிலத்தின் தலைமை ஆட்சியாளர் என்ற முறையில் அரசு வழங்கும் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கவில்லை. கிரிமினல்களுக்கு எளிதான இலக்காக நாம் ஆகிவிடக் கூடாது. கடவுள்கள் கூட ஆயுதங்களுடன் தான் உள்ளனர்.
ரிஷிகளும், முனிவர்களும்தான் நிராயுதபாணிகளாக திரிகின்றனர். அரவிந்த் கேஜ்ரிவால் ஒன்றும் சன்னியாசி அல்ல... எனவே, அரசு வழங்கும் பாதுகாப்பை அவர் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications