டெல்லி பிரச்சாரத்தில் கெஜ்ரிவாலை அறைந்த மர்ம நபர்: நையப் புடைத்த ஆம் ஆத்மி கட்சியினர்
டெல்லி: தெற்கு டெல்லியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அடையாளம் தெரியாத ஒருவர் அறைந்துவிட்டார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரியில் திறந்த ஜீப்பில் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத ஒருவர் கெஜ்ரிவாலை அறைந்தார். அந்த அடி கெஜ்ரிவாலின் கழுத்தில் விழுந்தது. இதை பார்த்த ஆம் ஆத்மி கட்சியினர் அந்த நபர் மீது பாய்ந்து அவரை நையப்புடைத்தனர்.

இதை பார்த்த கெஜ்ரிவால் தன்னை யார் தாக்கினாலும் யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று தனது கட்சியினரை கேட்டுக் கொண்டார்.
பின்னர் கெஜ்ரிவாலை அறைந்தவரை போலீசார் கைது செய்தனர். கெஜ்ரிவால் தாக்கப்பட்டது இது ஒன்றும் முதல் முறை அன்று.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஹரியானாவில் பிரச்சாரம் செய்தபோது ஜெக்ரிவாலை ஒருவர் தாக்கினார். அதற்கும் முன்பு பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடும் வாரனாசியில் கெஜ்ரிவாலின் மீது மை வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications