பீகார் சகோதர சகோதரிகளே உங்கள் ஓட்டு நிதீஷ்குமாருக்கே... டிவிட்டரில் கெஜ்ரிவால் வாக்குசேகரிப்பு
டெல்லி: பீகார் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு வாக்களித்து அவரை மீண்டும் அம்மாநில முதல்வராக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டர் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் லாலுவின் ராஸ்டிரிய ஜனதா தளம், நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, உபேந்திர குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, மாஞ்சியின் அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘நிதிஷ் குமாருக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பீகாரில் வாழும் சகோதர, சகோதரிகளே உங்கள் ஓட்டுக்களை நிதிஷ்குமாருக்கே அளித்து மீண்டும் அவரை பீகார் முதல்வராக்குங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலின் இந்த பதிவிற்கு நிதிஷ்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘உங்களது ஆதரவுக்கும், ஆசிக்கும் நன்றிகள் கெஜ்ரிவால் ஜி' என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications