300 மி.லி. மது குடித்த 8 வயது கேரளச் சிறுவன் பலி
திருவனந்தபுரம்: தந்தையின் பீரோவில் இருந்த மதுவை அளவுக்கதிகமாக குடித்த 8 வயது கேரளச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
கேரள மாநிலம் குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன், பெற்றோர் வெளியில் சென்றிருந்ததால், வீட்டில் தனிமையில் இருந்துள்ளான். அப்போது எதேச்சையாக, அவனது அப்பா பீரோவில் மறைத்து வைக்கப் பட்டிருந்த மது பாட்டில் அவனது கண்களில் பட்டுள்ளது.
ஆர்வக் கோளாறில் மதுவைக் குடிக்க ஆரம்பித்துள்ளான் சிறுவன். பின், மதுவின் சுவைக்கு அடிமையாகி 300 மிலி அளவு மது அருந்தியுள்ளான். அதிகப் படியான மது அருந்தியதால் தன் நினைவை இழந்துள்ளான்.
மாலை வீட்டிற்கு திரும்பிய அவனது பெற்றோர், மகனது நிலை கண்டு பதறி உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மருத்துவர்கள் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதே சிறுவனின் மரணத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளதாம். மேலும், சிறுவனின் தந்தைக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும், அவரது நண்பர் பரிசாக அளித்த மது பாட்டிலை வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications