நாடு திரும்பும் கேரள மாநிலத்தவருக்கு வட்டியில்லா கடன்: உம்மன் சாண்டி

சவூதி அரேபிய நாட்டில், உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் நிடாகட் என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு தங்கிப் பணிபுரியும் ஏராளமானவர்கள் தங்களுடைய தாய்நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் ஏராளமான இந்தியர்கள் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதுவரை 1,34000 இந்தியர்கள் சவுதி நாட்டில் இருந்து திரும்பியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்கள் இதில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
நாடுதிரும்பியர்களுக்கு உதவும் முயற்சியாக கேரளா அரசு சிறப்பு திட்டங்களை தீட்டியுள்ளதாக முதல்வர் உம்மன் சாண்டி நேற்று தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பிய மலையாளிகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் சவுதி அரசு குறிப்பிட்ட பொது மன்னிப்பு காலம் முடிந்தது. இதுவரை 14,000 பேர் அங்கிருந்து கேரளாவிற்குத் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு உதவும் விதமாக சவூதி அரேபியா தவிர மற்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பணக்கார கேரளா வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார்.
ஏற்கனவே ஒரு சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் இறுதிச் சுற்றும் நடைபெற்று அவர்களிடமிருந்து உறுதியான வேலை வாய்ப்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மறுவாழ்வு மையம்
மேலும், கேரளா அரசு இவ்வாறு திரும்பி வருபவர்களுக்காக ரூட்ஸ் நோர்கா என்ற மறுவாழ்வு ஒருங்கிணைப்பு மையத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த அமைப்பை அணுகி தங்களின் வணிகத் திட்ட முதலீடுகளுக்கு வட்டியில்லாக் கடனாக 20 லட்சம் வரை அவர்கள் பெறமுடியும்.
வாகனங்கள் வாங்கி தொழில் புரிய விரும்புவோருக்கும் மானியத்துடன் கூடிய நிதி உதவி கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழுவினராக ஏதேனும் தொழில் தொடங்க விரும்பினால் கூட அவர்கள் தங்கள் மூலதன செலவுகளில் 10 சதவிகதம் மானியத்துடன் வட்டித் தொகையும் 5 சதவிகிதத்திற்கு உட்பட்டு கடன் பெறமுடியும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications