ஆசை வார்த்தை கூறி நர்சை ஊட்டிக்குக் கூட்டிச் சென்று ஜாலியாக இருந்த போலி டாக்டர்
திருவனந்தபுரம்: நர்ஸிடம் ஆசை வார்த்தை கூறி ஊட்டிக்குக் கூட்டி வந்து உல்லாசமாக இருந்த கேரளாவைச் சேர்ந்த போலி டாக்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையை அடுத்த கள்ளிக்காடு பகுதியில் ஆயுர்வேத ஆஸ்பத்திரி நடத்தி வந்தவர் அஜய்குமார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இவரது ஆஸ்பத்திரியில் காட்டாக்கடையை சேர்ந்த 25 வயது நர்ஸ் ஒருவர் பணியாற்றி வந்தார்.

சில நா்ட்களுக்கு முன்பு திடீர் என்று இந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டது. டாக்டர் அஜய்குமார் மாயமாகி விட்டார். கூடவே அங்கு பணி புரி்ந்து வந்த நர்சையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சின் தந்தை காட்டாக்கடை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் டாக்டர் அஜய்குமாரின் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற எனது மகள் வீடு திரும்பவில்லை அந்த ஆஸ்பத்திரியும் பூட்டி இருப்பதால் எனது மகளை டாக்டர் கடத்தி சென்று உள்ளார். எனவே எனது மகளை டாக்டரிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரையும், நர்சையும் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஊட்டியில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே காட்டாக்கடை போலீசார் அங்கு விரைந்து சென்று டாக்டர் அஜய்குமாரையும், நர்சையும் பிடித்து காட்டாக்கடைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு வைத்து அந்த நர்சிடம் விசாரணை நடத்தியபோது டாக்டர் தனக்கு ஆசை வார்த்தை கூறி லாட்ஜில் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் டாக்டரிடம் விசாரித்தபோது அவர் போலி டாக்டர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியானது. அஜய்குமார் காட்டாக்கடையில் ஒரு ஆயுர்வேத டாக்டரிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். அந்த டாக்டர் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மருத்துவ சர்டிபிக்கேட்டுகளை அஜய்குமார் திருடி அந்த டாக்டர் பெயரிலேயே கள்ளிக்காட்டில் ஆஸ்பத்திரி நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அஜய்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட நர்ஸ் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications