For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் கொல்லப்பட்ட மது வீட்டிற்கு சென்ற பினராயி விஜயன்... மனநலமற்றவர்களுக்கு புதிய பாதுகாப்பு

கேரளாவில் கொல்லப்பட்ட மது வீட்டிற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சென்று இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நாம் வாழும் இந்த சமூகம் நாகரீகமானது தானா?- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லப்பட்ட மது வீட்டிற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சென்று இருக்கிறார். அந்த குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணையிட்டுள்ளார்.

    கேரளாவில் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மது என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையை செய்தவர்கள் அதை வீடியோவும் எடுத்து இருந்தார்கள்.

    இந்த சம்பவம் இந்தியா முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல மாநில மக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

    மோசமான வீடியோ

    மோசமான வீடியோ

    இவர் மோசமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பிரச்சனையில் சில கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

    நிவாரணம்

    நிவாரணம்

    ஏற்கனவே கேரளா அரசு அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதி அளித்து இருந்தது. 10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என்று பினராயி விஜயன் குறிப்பிட்டு இருந்தார். மேலும் விரைவில் நேரில் வந்து சந்திப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    நேரில் சந்தித்தார்

    நேரில் சந்தித்தார்

    இந்த நிலையில் கேரள முதல்வர் பின்ராயி விஜயன் சென்று சந்தித்தார். அவர் வீட்டில் இருக்கும் இருக்கும் உறுப்பினர்களுடன் உரையாடினார். அவருடன் மொத்தம் 20 அதிகாரிகள் சென்று இருந்தார்கள். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று இருந்தார்கள்.

    மறுவாழ்வு மையம்

    மறுவாழ்வு மையம்

    இந்த நிலையில் அந்த கிராமத்தில் பெரிய மறுவாழ்வு மையம் கட்டபட உள்ளது. அங்கு இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இந்த கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட இருக்கிறார்கள். அதேபோல் அங்கு இருக்கும் ஒவ்வொரு மலைவாழ் கிராமங்களிலும் இது போன்ற வீடுகள் கட்டப்பட இருக்கிறது.

    English summary
    A Tribal youth named Madhu killed by a group of people in Kerala. The youth was mentally challenged. The group of people beaten him for stealing eatables. Postmodern report says that couldn't find any food inside in Madhu stomach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X