பிரதமர் நரேந்திர மோடியுடன் கேரள முதல்வர் உம்மன் சாண்டி சந்திப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உம்மன்சாண்டி விழாவில் கலந்து கொள்ளவில்லை. தனக்கு அவசர அலுவல்கள் இருப்பதால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார். அவருடைய இந்த செயலுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து எதிர்ப்பை சமாளிப்பதற்காக பிரதமரை சந்தித்து பேச உம்மன்சாண்டி தீர்மானித்தார். இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை உம்மண்சாண்டி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு விவகாரம், விழிஞ்ஞம் துறைமுகம், மோனோ ரயில், பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் உம்மண்சாடி ஆலோசித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications