51 வயது பெண்ணிடம் சில்மிஷம்...கேரள காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் கைது!
51 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் : 51 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில், கோவளம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் வின்சென்ட். கடந்த வாரம் பாலராமாபுரத்தை சேர்ந்த 51வது பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து நெய்யத்திங்கரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் எம்எல்ஏ வின்சென்ட் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். 51 வயது பெண்ணின் சகோதரர் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு எம்எல்ஏ வின்சென்ட் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு, அவருக்கு பாலியல் தொல்லைகளும் கொடுத்தாக போலீசில் கூறியிருந்தார். இந்நிலையில் எம்எல்ஏ அந்தப் பெண்ணிடம் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானதாகத் தெரிகிறது.
இதனையடுத்து இந்த புகாரை விசாரித்த கேரள போலீசார் தற்கொலைக்கு தூண்டியது, பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த புகாரில் முகாந்திரம் இருப்பதையடுத்து வின்சென்ட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறு செய்த எம்எல்ஏ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்று கேரள சட்டசபை சபாநாயகர் கூறியதையடுத்து வின்சென்ட் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது திட்டமிட்டே வழக்கு போடப்பட்டுள்ளதாக வின்சென்ட் காவல்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications