Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை நரம்பை கிழித்து.. மணிக்கட்டை சுவரில் தேய்த்து.. அதிர வைத்த ஜோலி.. உறைந்து போன கேரள சிறை

சயனைடு கில்லர் ஜோலி சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு: அடிக்கடி அபார்ஷன்கள்.. அசால்ட்டான கொலைகள்.. என கேரளாவை கதி கலங்க வைத்த ஜோலி, இன்று திடீரென தன்னுடைய கை நரம்பை கிழித்து கொண்டுவிட்டார்.. மேலும் டைல்ஸ் சுவற்றில் தன் மணிக்கட்டை தேய்த்து தற்கொலைக்கும் முயன்றுள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலுள் கூடத்தொரை சேர்ந்தவர் ஜோலி.. தன்னுடைய மாமனார் ஜான் தாமஸ், மாமியார் அன்னம்மா, ஒரு வயது குழந்தை உட்பட 6 பேரை கொலை செய்தவர்.

2002 முதல் 2016 வரை இவர்கள் 6 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர். எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை. ஒரே மர்மமாக இருந்தது. ஆனால் ஆறு பேரின் சாவுமே ஒரே மாதிரியாக இருந்தது.

மட்டன் சூப்

மட்டன் சூப்

17 வருடங்களுக்கு பிறகுதான் சொத்துக்காக 6 பேரையும் பொன்றது ஜோலி என தெரியவந்தது... மட்டன் சூப்பில் சயனைடு கொன்று கொலை செய்துள்ளார்.. இது சம்பந்தமாக போலீசார் கடந்த அக்டோபர் மாதம் ஜோலியை கைது செய்து விசாரித்தனர்.. போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடந்தது.. ஒவ்வொரு நாளும் ஜோலியிடம் விசாரணை நடத்தும்போதும், வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் கேரள போலீசாருக்கு வயிற்றில் புளியை கரைத்தது.

சயனைடு டப்பா

சயனைடு டப்பா

மாமனாருக்கு காபியில் விஷம்.. மாமியாருக்கு சூப்பில் விஷம் வைத்து கொன்றுள்ளார். இதற்காகவே சயனைடு விஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருக்கிறார். பல கட்ட விசாரணைகள் நடந்து முடிந்தன.. இப்போது ஜோலி, கோழிக்கோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்த ஜோலி திடீரென இன்று காலை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

விடிகாலை 4.30 மணி இருக்கும்.. தன்னுடைய கை நரம்புகளைத் துண்டித்து கொண்டுள்ளார்.. இதை பார்த்து பதறிய சக கைதிகள் தகவல் அளிக்கவும், விரைந்து வந்து ஜோலியை மீட்டனர்.. உடனடியாக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் ஜோலி சேர்க்கப்பட்டார். கூர்மையான பொருளை வைத்துதான் கையை கிழித்திருக்க முடியும் என்கிறார்கள்... பிளேடு, அல்லது கண்ணாடி துண்டு, இப்படி ஏதாவது ஒன்றினால் கையை கிழித்துள்ளார்.. அதனால் ஜோலியின் கை நரம்புகள் அறுந்துள்ளன என்கிறார்கள்.

விளக்கம்

விளக்கம்

சிறையில் எப்படி கூர்மையான பொருள் ஜோலிக்கு கிடைத்தது என தெரியவில்லை.. ஜெயிலில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதா என்ற சந்தேகத்தையும், சர்ச்சையையும் இது கேரளாவல் கிளப்பி உள்ளது.. ஆனால் கோழிக்கோடு மாவட்ட ஜெயில் சூப்பிரண்டு சொல்லும்போது, "ஜோலி தங்கியிருந்த இடத்தில் எந்த கூர்மையான பொருளும் இல்லை.. அப்படி எதுவும் கண்டுபிடிக்கவும் இல்லை.. அநேகமாக கை நரம்புகளை கடித்து அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம்" என்றார்.

ஜெயில் ரூம்

ஜெயில் ரூம்

இந்த சமயத்தில் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.. தன்னுடைய பல்லால் கை நரம்பை ஜோலி கடித்துள்ளார்.. மேலும் ஜெயில் ரூமில் இருந்த டைல்ஸின் ஓரத்தில் கையை கொண்டு வைத்து அறுத்துள்ளார் என்றும் சொல்லப்படுடிகிறது. ஆனாலும் எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.. ஆனால் ஏற்கனவே கைதாவதற்கு முன்பேயே ஒருமுறை ஜோலி தற்கொலை செய்யக்கூட முயன்றதாக விசாரணையின்போது சொல்லி இருந்தார்..

விசாரணை

விசாரணை

"கூடத்தாயியில் உள்ள வீட்டில் ஒரு முக்கியமான பொருளை மறைச்சு வெச்சிருக்கேன்.. அது என்ன தெரியுமா? 6 பேரை கொன்னுட்டோமே.. ஒருவேளை போலீசில் சிக்கினால் நானும் அதே சயனைடு சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.. அதற்காகத்தான் எனக்குகொரு டப்பா சயனைடை வாங்கி அந்த வீட்டில் வெச்சிருக்கேன்" என்று கூலாக சொன்னார். அதனால் ஏற்கனவே ஜோலி தற்கொலை எண்ணத்தில் இருந்தவர்தான்.. இருந்தாலும் இன்று மணிக்கட்டை கிழித்து கொண்டு சாக முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை கேரளாவில் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+