கொல்லம் தீ விபத்து: ரசிகர்களிடம் உதவி கோரிய சூர்யா
திருவனந்தபுரம்: கொல்லத்தில் நடந்த வெடிவிபத்து நிகழ்ச்சிக்கு உதவுமாறு நடிகர் சூர்யா, தன்னுடைய ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கோவில் திருவிழாவில் நடந்த வெடிவிபத்தில் சுமார் 90க்கும் அதிகமான பேர் உயிரிழந்தனர்.

மேலும் 350 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.அதில் "சுமார் 350க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு அதிகளவில் ரத்தம் தேவைப்படுகிறது.ரசிகர்கள் தங்களால் முடிந்த ரத்தத்தை வழங்கி உதவுங்கள்.
அவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார். சூர்யாவின் இந்த கோரிக்கை இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாமும் வேண்டிக் கொள்வோம்..












Click it and Unblock the Notifications