தமிழக அரசு பேருந்து தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மறுப்பு..பயணிகள் ஏமாற்றம்
தேக்கடி: தமிழக அரசு பேருந்துகளை தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லை பெரியாறு அணை யில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. தேக்கடியில் இருந்து தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45 மற்றும் 3.30 என்று 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தலா ஒன்றரை மணி நேர பயணம் ஆகும்.

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுப் போக்குவரத்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கேரளாவின் பல பகுதிகளில் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகளை கவர கேரள சுற்றுலாத்துறை தேக்கடியில் கட்டணங்களை குறைத்துள்ளது. கொரோனா பாதிப் புக்கு முன்பு நுழைவுக்கட்டணம் ரூ.70, படகு சவாரிக்கு ரூ.385ம் வசூலிக்கப்பட்டது. தற்போது நுழைவுக் கட்டணம் ரூ.45 ஆகவும், படகு சவாரிக்கு ரூ.255 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தேக்கடிக்கு செல்வதற்கான பல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு பேருந்துகள் மூலமும் கேரளாவிற்கு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தேக்கடியில் படகுத்துறைக்கு செல்வதற்கு தமிழக அரசுப்பேருந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
படகுத்துறைக்கு செல்ல பெர்மிட் இல்லை என்று சொல்லி கேரளா வனத்துறையினர் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications