சி.பி.எஸ்.இ உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளம் கட்டாயம்: கேரள அரசு அவசர சட்டம்
திருவனந்தபுரம்: சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாடத் திட்டங்களை கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகள், சுய நிதி கல்வி நிறுவனங்கள், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடப்பிரிவு கற்றுத்தரும் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் பிளஸ்டூ வரை மலையாளம் கட்டாயம்.

இப்படி ஒரு அவசர சட்டத்தை கொண்டுவர சில தினங்கள் முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றார் முதல்வர் பினராயி விஜயன். அவசர சட்டத்திற்கு ஆளுநர் சதாசிவம் இன்று கையெழுத்திட்டுள்ளார். எனவே இந்த கல்வியாண்டு முதலே சட்டம் அமலுக்கு வந்துவிடும். அதிகாரப்பூர்வமாக மே 1ம் தேதி முதல் சட்டம் அமலுக்கு வருவதாக அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதாகவும், மலையாளம் பேசுவது தடை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களை தொடர்ந்து கேரள அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த சட்டத்தை மீறும் பள்ளிகளுக்கு மிக அதிக அளவு அபராதம் விதிக்கப்படும். மலையாளத்தில் பேசக்கூடாது என உத்தரவு பிறப்பிப்பது, போர்டுகளில் எழுதி வைப்பது இனிமேல் இருக்க கூடாது. மலையாளம் பேசாத, மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டம் வகை செய்கிறது.
தமிழகத்திலும் இதேபோல தமிழ் மொழி காக்கும் நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசு எடுக்குமா? அல்லது இடைத் தேர்தல்கள், ஐடி ரெய்டுகளில் பிஸியாக இருக்குமா என்பதை காலம்தான் கூற வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications