பத்மநாப சாமி கோயில் நகைகளை தொட விடமாட்டோம்..கேரள முதல்வர் உம்மன் சாண்டி அதிரடி
திருவனந்தபுரம்: நாட்டின் தங்க இறக்குமதியால் வர்த்தக பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் கோவில்களில் இருப்பு உள்ள நகைகளை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகில் தங்க பயன்பாட்டில் இந்திய மக்கள் முன்னிலையில் உள்ளனர். ஆனால் இந்தியாவில் தங்க உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்க இறக்குமதியில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் இதை கருத்தில் கொண்டு கோவில்களில் இருப்பு உள்ள, உபயோகத்தில் இல்லாத நகைகளை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் தங்கம் பற்றாக்குறை நீக்கும், அன்னிய செலவாணி கையிருப்பு நீடிக்கும். மேலும் இதனால் கோவில்களுக்கும் வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது குறித்து கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில்,
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரிசெய்ய கோவில்களில் உள்ள இருப்பு நகைகளை வங்கியில் வைப்பாக வைத்து அதன் மூலம் கோவில்களுக்கு வட்டி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை ஒரு போதும் கேரள அரசு ஏற்காது. கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் இருக்கும் விலை மதிக்க முடியாத நகைகளை தொடக்கூட விட மாட்டோம். எந்த கோவிலின் நகைகளையும் பக்தர்களின் அனுமதியின்றி தொடவிட மாட்டோம் என்றார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications