"ஈழவா" மடாதிபதி சுவாமி சாஸ்வதிகானந்தா மர்ம மரணம் குறித்து மறு விசாரணைக்கு கேரளா உத்தரவு!
திருவனந்தபுரம்: ஈழவா சமூகத்தின் சிவகிரி மடாதிபதியாக இருந்த சுவாமி சாஸ்வதிகானந்தா மர்ம மரணம் குறித்து மறுவிசாரணைக்கு கேரளா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஈழவா சமூகத்துக்காக சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு அமைத்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன பீடம் யோகத்தின் சிவகிரி மடாதிபதியாக இருந்தவர் சுவாமி சாஸ்வதிகானந்தா. 1900களில் இந்த சிவகிரி மடத்தின் அதிகாரத்தை மதுபான தொழிலதிபர் வெள்ளாபள்ளி நடேசன் உதவியுடன் கைப்பற்றினார் சுவாமி சாஸ்வதிகானந்தா.

பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி சாஸ்வதிகானந்தா முல்லைப் பெரியாறில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. இதன் பின்னர் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன பீடம் யோகத்தின் தலைவராக வெள்ளாபள்ளி நடேசன் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் கேரளாவில் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன பீடம் யோகமும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து 3வது அணியாக களமிறங்கும் என வெள்ளாபள்ளி நடேசன் அறிவித்தார். இதற்காக பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரையும் அவர் சந்தித்தார்.
இந்த வியூகத்தை வகுத்தது தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தி. இதுநாள் வரை ஸ்ரீ நாரயண தர்ம பரிபாலன் பீட யோகத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்த ஈழவர்கள் இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இருந்தவர்கள். தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஈழவர்களை வெள்ளாபள்ளி நடேசன் திருப்பிவிடுவது இடதுசாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதன் எதிரொலியாக கிளப்பிவிடப்பட்டது சுவாமி சாஸ்வதிகானந்தாவை வெள்ளாபள்ளி நடேசன் படுகொலை செய்தார் என்பது. இதனால் சுவாமி சாஸ்வதிகானந்தா மரணம் குறித்து மறுவிசாரணை நடத்தவும் இடதுசாரிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் தொடக்கத்தில் இந்த கோரிக்கையை நிராகரித்து வந்த கேரளா அரசு தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த விசாரணை உத்தரவு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications