கேரளா.. பாவமன்னிப்பு கேட்ட பெண்ணிடம் "பாவம்" செய்த பாதிரியார்கள் கைது செய்யப்படுவார்களா?
கேரளத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் கேரளத்தில் உள்ளனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஜான்சனின் மனைவி கிரெடிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து ரூ.50,000க்கும் மேல் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஜான்சனுக்கு எஸ்எம்எஸ் வந்தது. உடனே மனைவிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது மனைவி சொன்னதை கேட்டு ஜான்சன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

உறுத்தலாக இருந்தது
திருமணத்திற்கு முன்பு ஜான்சனின் மனைவி தனது உறவினரும் பாதிரியாருமானவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஜான்சனை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்ற பிறகு மிகவும் உறுத்தலாக இருந்தது.

கணவரிடம் கூறிவிடுவேன் என மிரட்டல்
இதற்காக மலங்கரை ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ சபையின் கீழ் இயங்கி வரும் மலப்பள்ளி சர்சுக்கு சென்றார். அங்கிருந்த பாதிரியாரிடம் நடந்தவற்றை கூறி பாவமன்னிப்பு கேட்டார். இதை கேட்ட அந்த பாதிரியார் திருமணத்துக்கு முன்பே பலாத்காரம் செய்த சம்பவத்தை ஜான்சனிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு ஜான்சன் மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

வீடியோ எடுத்த பாதிரியார்
இதையடுத்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஜான்சன் மனைவியை சின்னாபின்னமாகி அதை வீடியோவாக எடுத்து கொண்டார் அந்த பாதிரியார். பிறகு அதை வைத்து மிரட்டி மீண்டும் மீண்டும் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை மற்ற 4 பாதிரியார்களுக்கும் அனுப்பியதில் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி உறவு வைத்துள்ளனர்.

சஸ்பெண்ட்
மேலும் ஜான்சன் மனைவியை அவ்வப்போது பணம் கேட்டும் மிரட்டி பறித்துள்ளனர். இந்த சம்பவத்தை கேட்டு பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த ஜான்சன், கத்தோலிக்க சபை பிஷப்புக்கு தெரிவித்தார். இதையடுத்து அந்த 5 பாதிரியார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜான்சனோ அவரது மனைவியோ இதுவரை போலீஸில் புகார் செய்யப்படவில்லை. ஆனால் இவர்கள் புகார் அளித்து அந்த பாதிரியார்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications