ஹாயாக போஸ் கொடுத்து பேஸ்புக்கில் போட்டோ போட்ட கைதிகள்.. 24 சிறை ஊழியர்கள் டிரான்ஸ்பர்
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரின் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியான விவகாரம் அங்கு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 24 சிறை ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் கைதிகள் கடும் கஷ்டப்படுவதாகவும், கல் உடைப்பதாகவும், துன்புறுத்தலுக்குள்ளாவதாகவும்தான் பெரும்பாலானவர்கள் ஒரு காலத்தில் கருதி வந்தனர்.
ஆனால் இன்று சிறைச்சாலை, பெரும் சொர்க்கபுரியாக மாறியிருக்கிறது - கைதிகள் பணக்காரர்களாக, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக, பிற வகையான செல்வாக்குக் கொண்டவர்களாக இருந்தால் இது சாத்தியம்தான்.
செல்போன்களின் நடமாட்டம், விரும்பிய உணவு, முடிந்தால் இரவில் வெளியே போய் விட்டு மீண்டும் சிறைக்குள் திரும்பி விடுவது என உள்ளே ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்தபடிதான் உள்ளன.
இந்த நிலையில் கேரள சிறைக் கைதிகள் சிலர் போட்டோ எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு அடுத்த கட்டத்திற்கு சிறை வாழ்க்கையைக் கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்குக் கைதிகள்
கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சந்திரசேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் கொடிசுனி, அனூப், மனோஜ், முகம்மது ஷாபி, சுஜித் ஆகியோர்.

பேஸ்புக்கில் போட்டோ
இந்த ஐந்து பேரின் போட்டோவும் பேஸ்புக்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குரூப் போட்டோ போல எடுத்துள்ளனர்.

சிரித்தபடி.. போனில் பேசியபடி
சிரித்தபடி ஐவரும் நிற்கிறார்கள். சிலர் போனில் பேசுவது போலவும் போட்டோவில் உள்ளது.

உள்துறை அமைச்சருக்கு சிக்கல்
இந்த புகைப்படம் வெளியானதும், பேஸ்புக்கில் போடப்பட்டதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. கேரள மாநில உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

சிறையில் நேரில் ஆய்வு
இதையடுத்து அவரும், சிறைத்துறை ஐஜியும் சிறைக்கு நேரில் போய் ஆய்வு நடத்தினர். கைதிகளின் அறைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது செல்போன் உள்பட வேறு சட்ட விரோத பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

24 பேர் கூண்டோடு இடமாற்றம்
இருப்பினும், கோழிக்கோடு சிறையின் 5 உதவி ஜெயிலர்கள், 19 வார்டன்கள் ஆகியோரை பணியிட மாறுதல் செய்து ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

கைதிகளும் இடமாற்றம்
அதேபோல புகைப்படத்தில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த ஐந்து கைதிகளையும் வேறு சிறைக்கு மாற்றி விட்டனர்.

கைதியின் பேஸ்புக்கில்
இந்தப் புகைப்படங்கள் மனோஜ் கிர்மானி என்பவரின் பேஸ்புக்கில் வெளியாகியிருந்தது. மனோஜும் ஒரு கைதிதான். சிறைக்குள் போன பிறகும் கூட அவரது பேஸ்புக் ஆக்டிவாவாகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications