எல்லாரும் கேமராவை ஆன் செய்ங்க.. உங்களை பார்க்கணும்.. உயிர் பிரியும் முன் ஆசிரியை நெகிழ்ச்சி
காசர்கோடு: தனது மாணவர்களை ஆன்லைன் மூலம் பார்த்துவிட்டு ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை மாதவி (46). இவர் அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கொரோனா சூழலால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியை மாதவி ஆன்லைனில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

இருமல்
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இருமலும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. பொதுவாக ஆன்லைன் கிளாஸில் மாணவர்கள் வீடியோவை ஆன் செய்துவிட்டு அட்டன்ட் செய்தால் நெட்வொர்க் பிரச்சினை ஏற்படும் என்பதால் பெரும்பாலும் அவர்களை வீடியோவை ஆஃப் செய்ய சொல்லிவிட்டுத்தான் வகுப்பெடுப்பார்கள்.

அடுத்த வகுப்பு
அது போல்தான் மாதவியும் வகுப்பெடுத்தார். உடனே வீடியோவை ஆன் செய்யுங்கள், நான் உங்களை பார்க்க வேண்டும் என கூறினார். மாணவர்களும் ஆன் செய்தனர். அதில் சில மாணவர்களிடம் பேசியுள்ளார். பின்னர் வீட்டுப் பாடம் கொடுத்த மாதவி தனக்கு உடல் நிலை சரியில்லாததால் அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என கூறிவிட்டார்.

மயக்கம்
அவரது உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மாதவி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்புகளை ரெக்கார்டு செய்து அதை கிளாஸுக்கு வராத மாணவர்கள் போட்டு பார்த்து தெரிந்து கொள்வர்.

சோகம்
ஆனால் மாதவி ரெக்கார்டு செய்த ஆன்லைன் வகுப்பு அவரது உறவினர்களுக்கும் மாணவர்களுக்கு சோக நினைவுகளாக மாறிவிட்டது. அவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆன்லைன் வகுப்பை எடுத்துக் கொண்டிருந்த போது தான் இறந்துவிடுவோம் என தெரிந்தவுடன் மாணவர்களை ஒரு முறை பார்க்க விரும்பிய ஆசிரியையின் பாசத்தையும் நேசத்தையும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் நினைத்து பார்க்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications