யானைக்காக யுத்தம்: அரிகொம்பன் எங்க ஊருக்காரன்..கொண்டு வந்துவிடுங்க.. கேரளாவில் வெடித்த போராட்டம்!
மூணாறு: தமிழ்நாடு, கேரளாவில் வில்லனைப் போல தலைப்புச் செய்தியாக பேசப்பட்ட அரிசி கொம்பன் யானை, மூணாறு சின்னக்கானல் மக்களின் ஹீரோ.. அரிசி கொம்பனின் பூர்வீகம் எங்கள் வனப்பகுதி; அதனால் அரிசி கொம்பனை இங்கேயே கொண்டு வந்து விட வேண்டும் என்பது சின்னக்கானல் வனப்பகுதி மக்களின் போராட்டம்.
கம்பம் நகரில் அரிசி கொம்பன் - 144 தடை உத்தரவு; அரிசி கொம்பனை ஊருக்குல் உலா- மிரளும் மக்கள் என்றெல்லாம் எழுதி ஓய்ந்துவிட்டன ஊடகங்கள். ஒருவழியாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது அரிசி கொம்பன் யானை.

முதலில் கேரளாவின் இடுக்கி வனப்பகுதியில்தான் அரிசி கொம்பன் உலா வந்தது. பின்னர் கேரளா அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அரிசி கொம்பனார் அங்கிருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்குள் "ஊடுருவி விட்டார்". மணலாறு மேகமலை வனப்பகுதி பின்னர் கம்பம் நகரம் என இதன் நகர்வலம் தொடர்ந்தது. ஏற்கனவே கேரளாவில் மூர்க்கமாக 10 பேரை அரிசி கொம்பன் போட்டு மிதித்து விட்டதால் அச்சம் இயல்பாகவே எழுந்தது. இதனையடுத்தே 144 தடை உத்தரவு எல்லாம் பிறப்பிக்கப்பட்டது.
பிடிபட்ட அரிசி கொம்பன் யானையை, களக்காடு வனப்பகுதியில் கொண்டு போய் இறக்கிவிட்டனர் தமிழ்நாடு வனத்துறை. ஆனால் அரிசி கொம்பன் யானையை முன்வைத்து வழக்கு, போராட்டங்கள் என புது பிரச்சனைகள் கிளம்பின. அரிசி கொம்பன் யானையை கேரளா வனத்துறையிடம் ஒப்படைக்க கோரி ஒரு வழக்கு போடப்பட்டது. அதேநேரத்தில் களக்காடு வனப்பகுதியில் விடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடந்தன.

இந்த களேபரங்களுக்கு மத்தியில் கேரளாவின் மூணாறு சின்னக்கானல் மக்கள், அரிசி கொம்பனை தங்களது வனப்பகுதியில் கொண்டு வந்துவிடக் கோரி போராட்டம் நடத்தி உள்ளனர். அதாவது அரிசி கொம்பனின் பூர்வீகம் சின்னக்கானல் வனப்பகுதிதானாம்; என்ன நடந்தாலும் தாய்வீடான மூணாறு சின்னக்கானல் வனப்பகுதியில்தால் கொண்டுவந்துவிட வேண்டும். அரிசி கொம்பனை முன்வைத்து வம்பு வழக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதும் சின்னக்கானல் மக்களின் போராட்ட குரல். அரிசி கொம்பன் என்ற ஒற்றை யானையை தங்கள் உறவாகக் கருதி சின்னக்கானல் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியது திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
கேரளாவில் அரசு பேருந்துகளில் இனி இலவச பயணம்! சாதனை உத்தரவில் கையெழுத்திட்ட பெண் செயலாளர்! சூப்பர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications