இந்தியாவின் முதல் பெண் இமாமாக நியமிக்கப்பட்டார் ஜமீதா .. கேரளாவில் இன்னொரு புரட்சி!
இந்தியாவின் முதல் பெண் இமாமாக ஜமீதா என்ற பெண் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மலப்புரம்: இஸ்லாமிய மதத்தில் இமாம் என்பது மிகவும் உயரிய பொறுப்பாகும். இந்தியாவில் இதுவரை ஆண்களே இமாமாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் முதல் முறையாக கேரளாவில் பெண் இமாம் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஜமீதா டீச்சர் என்ற ஜமீதா இமாமாக தேர்வாகி உள்ளார்.
இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மலப்புரத்தில் நடந்த தொழுகையில் கலந்து கொண்டு உள்ளார். இமாமாக அந்த தொழுகையை வழிநடத்தி இருக்கிறார்.

பெண் இமாம்
இவர் கேரளா மாநிலம் மலப்புரத்தில் வசிக்கிறார். அங்கு தினமும் 100 பேருக்கும் அதிகமானோருக்கு குரான் கற்றுக்கொடுத்து வருகிறார். இதன் காரணமாக அங்கு இவர் ஜமீதா டீச்சர் என்று அழைக்கப்பட்டுவருகிறார்

வேறுபாடு கிடையாது
இவர் தான் இமாமாக தேர்வானது குறித்து பேசியுள்ளார். அதில் ''நான் இமாமாக நினைத்த போது என்னை குறித்து பலரும் தவறாக பேசினார்கள். நீ தவறான முடிவு எடுக்கிறாய் என்றார்கள். ஆனால் எனக்கு தெரியும் கடவுளுக்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. நான் செய்வதில் தவறு இல்லை'' என்று சந்தோசமாக குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டல்
இவர் இமாமாக முயன்ற காரணத்தால் கொலை மிரட்டல் கூட வந்து இருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்த போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின்பே இவர் மலப்புரத்தில் குடியேறி குரான் கற்றுக்கொடுத்துள்ளார்.

அமைப்பு
இவருக்கு மலப்புறத்தில் இமாம் ஆக குரான் சுன்னத் அமைப்பு உதவி இருக்கிறது. 2016ல் அங்கு சாதாரணமாக சேர்ந்த அந்த பெண் தற்போது அந்த அமைப்பின் தலைமை செயலாளர் ஆகியுள்ளார். குரானுக்கு எந்த பேதமும் இல்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications