ரகசிய கேமரா சர்ச்சை.. கேரள ஜவுளி கடைகளில் 'ஆபரேசன் மாண்பு' ரெய்டு நடத்தும் போலீசார்
திருவனந்தபுரம்: ஜவுளிக்கடைகளில் பெண்கள் உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய கேரளாவில் 'ஆபரேசன் டிக்னிட்டி' என்ற பெயரில் போலீசார் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர்.
கோவாவில் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒரு பிரபல ஜவுளி கடையில் ஆடை வாங்கி உடுத்த சென்றபோது, அங்கு ரகசிய கேமரா இருப்பதை கண்டறிந்து போலீசி்ல் புகார் அளித்தார். இதையடுத்து கடை ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கேரளாவிலும் கடைகளில் அதுபோன்ற கேமராக்களை பொருத்தி வைத்துள்ளனரா என்பதை சோதித்து பார்ப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது. துணை கமிஷனர் சக்காரியா ஜார்ஜ் தலைமையில் 4 சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் திருவனந்தபுரத்தில், 15 ஜவுளிக்கடைகளில் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெண்கள் பிரிவு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லலிதா கூறுகையில், பதினைந்து கடைகளில் திடீர் சோதனை நடத்திய நிலையில், எந்த கடையிலும், கேமராக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எங்கள் சோதனை தொடரும் என்றார்.
இந்த ரெய்டின் பெயர் ஆபரேசன் டிக்னிட்டி என்பதாகும். தமிழகத்திலும், இதுபோன்ற சோதனைகள் அவசியம் என்பது பெண்மணிகள் கருத்தாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications