தந்தையின் சிகிச்சைக்கு உதவி கேட்டு மோடிக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்: உடனே உதவிய பிஎம்ஓ
டெல்லி: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் தந்தைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்களின் தந்தைக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்பஸ்தா பகுதியைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் சுஷாந்த் மிஸ்ரா(13), தன்மயி மிஸ்ரா (8). அவர்களின் தந்தை சரோஜ் மிஸ்ராவுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை அதிகமாகியதை அடுத்து சரோஜ் கடந்த 6 மாதங்களாக தனது டெய்லர் தொழிலை செய்ய முடியவில்லை.
Two Kanpur brothers write to PM Modi for financial help due to father's illness, PMO ensures treatment free of cost pic.twitter.com/jr5O2PL4ES
— ANI (@ANI_news) March 3, 2016
இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. சுஷாந்த் மற்றும் தன்மயி பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டனர். சரோஜ் மிஸ்ராவின் சிகிச்சைக்கு அவரது நண்பர்கள், உறவினர்கள் பணம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களும் ஏழை என்பதால் அவர்களால் தொடர்ந்து உதவ முடியவில்லை.
இந்நிலையில் சுஷாந்த் மற்றும் தன்மயி தங்களின் தந்தையின் சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்களின் தந்தைக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் மோடிக்கு சிறுவர்கள் உதவி கேட்டு கடிதம் எழுதினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications