விவசாயிகளே உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கொல்லுங்கள்... ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை
மும்பை: உங்களுக்கு துரோகம் செய்பவர்களைக் கொல்லுங்கள் என வன்முறையைத் தூண்டும் விதத்தில் மராட்டிய நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசிய கருத்துக்களால் சர்ச்சை உண்டாகியுள்ளது.
நேற்று மராட்டிய மாநிலம் விதார்பா பகுதி மராட்டிய நவநிர்மாண் கட்சியின் வேட்பாளர் ராஜூ பாட்டீல் ரஜேவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் அக்கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே. அப்போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக சாடினார்.
மேலும், மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம் குறித்து பேசும் போது, ‘விவசாயிகளே, உங்களுகு அநீதி அளிப்பவர்களை கொல்லுங்கள்' என ஆவேசமாகக் கூறினார் ராஜ் தாக்கரே.

மேலும், அவர் தனது பிரச்சாரத்தில் கூறியதாவது:-
சாலைகள், குடிநீர் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக கடந்த 67 ஆண்டுகளாக தேர்தலில் போராடி வருகிறோம். ஆனால் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து இங்கு உள்ளது. இந்நிலையில் மக்கள் தேர்தல் வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மதுபானங்கள் கிடைக்கின்றன. அப்படியிருக்க குடிநீர் மட்டும் எப்படி கொடுக்கப்படமுடியாது' என்றார்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசிய ராஜ்தாக்கரே, ‘விவசாயிகளின் தற்கொலைக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியே காரணம். விவசாயிகளே நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் உங்களுக்கு அநீதி அளித்தவர்களை கொல்லுங்கள்' என இவ்வாறு அவர் பேசினார்.
வன்முறையைத் தூண்டும் விதத்தில் ராஜ் தாக்கரே பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications