என் டிவிட்டர் அக்கவுண்ட யாரோ ஹேக் செய்து ஜெட்லியை சீண்டிவிட்டார்கள்: பாஜக எம்.பி பல்டி
டெல்லி: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக டிவிட்டரில் கருத்து தெரிவித்ததால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.பியான கீர்த்தி பிரசாத், அந்த டிவிட் தன்னுடையதில்லை என கூறி பல்டியடித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக ஜேட்லி பதவி வகித்தபோது, பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதான புனரமைப்புக்கு ரூ.24 கோடி மதிப்பிடப்பிடப்பட்டு, ரூ.114 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளியில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஒரு லேப்டாப்புக்கு ரூ.36 ஆயிரம் ஒரு நாள் வாடகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிரின்டருக்கு தினமும் ரூ.3,000க்கு வாடகை அளிக்கப்பட்டுள்ளது. அதில் பணி செய்ததாக காட்டப்பட்ட 14 நிறுவனங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கிரிக்கெட் சங்க ஊழலில் மத்திய அமைச்சர் ஜேட்லிக்கு தொடர்பிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். சிபிஐ தனது அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கு பதிலடியாக கெஜ்ரிவால் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜேட்லி.
இதுகுறித்து டிவிட்டரில் பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் கூறிய கருத்து ஒன்று ஜேட்லியை சாடுவதாக இருந்தது. அந்த டிவிட்டரில், ஜேட்லி டிவிட்டர் அக்கவுண்டையும் டேக் செய்து, அவரை ஆண்மையற்றவர் என்று கீர்த்தியின் டிவிட் சாடியிருந்தது.
My A/C is hacked statement on @arunjaitley as napunsak is not my tweet
— Kirti Azad (@KirtiAzadMP) December 21, 2015 இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக நேற்று அக்கட்சி அறிவித்தது. இதனால் அதி்ச்சியடைந்த கீர்த்தி பிரசாத், தனது டிவிட்டர் அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து அவ்வாறு டிவிட் போட்டுவிட்டதாக டிவிட்டர் மூலம் கருத்து தெரவித்துள்ளார்.
அதேநேரம், ஹேக் செய்யப்பட்ட டிவிட்டரை எப்படி அவர் திரும்ப சரி செய்தார் என்ற விவரம் இல்லை. சஸ்பெண்ட் நடவடிக்கையால் அச்சமடைந்து, அவர் பல்டியடித்திருக்க கூடும் என்று தெரிகிறது.
ஏனெனில், நாடாளுமன்றத்தில், இதுகுறித்த விவாதம் வரும்போது, கீர்த்தி ஆசாத், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி) அமைத்து காலவரையறை நிர்ணயித்து இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். ஜேட்லிக்கும் அவருக்குமான மோதலின் ஒருபகுதியாகவே இந்த டிவிட் வெளியிடப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications