முத்த போராட்டத்திற்கு பெங்களூரு போலீசார் அனுமதி மறுப்பு! போராட்டக்காரர்கள் ஏமாற்றம்
பெங்களூரு: போலீசார் அனுமதி மறுத்ததால் பெங்களூருவில் இன்று நடைபெறுவதாக இருந்த முத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடங்கி வடமாநிலங்கள் வரை பரவி வரும் முத்த பிரசாரம் இன்று பெங்களூருவில் நடப்பதாக இருந்தது.

ஆனால் பொது இடத்தில் இது ஒழுக்கமற்ற செயலாக அமையும் என்று கூறி வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டம்-ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைத்த பெங்களூரு போலீசார் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தனர். எனவே இந்த நிகழ்ச்சி நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், முத்த பிரசாரத்தை அவர்கள் ஒத்தி வைப்பதாக நேற்று திடீரென்று அறிவித்தனர்.
இது குறித்து பேஸ்புக்கில் இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கூறியுள்ளதாவது: முத்த பிரசாரத்தின் மீது போலீசார் தெரிவித்துள்ள கவலைகள் தொடர்பாக அவர்களுக்கு விரிவான பதிலை அனுப்பி இருக்கிறோம். அதில் காதல் முத்த பிரசாரத்தை நடத்துவதன் நோக்கம் குறித்தும் விளக்கி எழுதி இருக்கிறோம். இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. போலீசார் அளிக்கும் பதிலின் அடிப்படையில் காதல் முத்த போராட்டம் பின்னர் நடத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications