கேரளாவில் காவல்நிலையத்துக்குள் "முத்தப் போராட்டம்"! சிவசேனா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!
ஆழப்புழா: கேரளாவில் ஆலப்புழா கடற்கரையில் முத்தப் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் காவல்நிலையத்துக்குள்ளே அவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து போராட்டத்ம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அநாகரீக செயல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து சில சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதற்கு கண்டனம் தெரிவித்து பேஸ்புக் ஆர்வலர்கள் கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து நாடெங்கிலும் இதைப்போன்ற முத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு அமைப்பு கடற்கரையில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து ஆலப்புழா கடற்கரை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அறிவித்தபடி முத்தப் போராட்டம் நடத்த வந்த 41 பேரை போலீசார் தடுத்து காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதேபோல் இந்த முத்தப் போராடத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவசேனா அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே காவல்நிலையத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் திடீரென கட்டிப் பிடித்து முத்தப் போராட்டம் நடத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications