ஓடும் ரயிலில் பெண்ணிடம் “சில்மிஷம்” – மூன்று ராணுவ வீரர்கள் கைது!
கான்பூர்: அலகாபாத்தில் ஓடும் ரயிலில் ராணுவ வீரர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய பெண் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலகாபாத்திலிருந்து திங்கட்கிழமை இரவு டெல்லிக்கு சென்ற 28 வயது பெண்ணிடம், அதே ரயில் பெட்டியில் இருந்த 3 ராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்க கழிவறைக்கு அருகே சென்ற அப்பெண்ணை ராணுவ வீரர்கள் தொடர்ந்து சென்றதாக தெரிகிறது.
சமயோசித முடிவு:
ஆனால், சமயோசிதமாக செயல்பட்ட அப்பெண், கதவில் ஒட்டப்பட்டிருந்த அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.
ராணுவ வீரர்கள் கைது:
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறையினர், குடிபோதையில் இருந்த ராணுவ வீரர்களை கைது செய்தனர்.
குடிபோதையால் வந்த வினை:
இது தொடர்பாக காவல் துறை அதிகாரி தெரிவிக்கையில், "இச்சம்பவம் தொடர்பாக மூன்று ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
ராணுவத்திற்குத் தகவல்:
வீரர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ராணுவத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகள் வந்த பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications