கேரளா சி.பி.எம். செயலராக கொடியேறி பாலகிருஷ்ணன் தேர்வு! மாநிலக் குழுவில் 'அச்சுவுக்கு' இடம் இல்லை!!
ஆழப்புழா: கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கொடியேறி பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் முதல்வரான சர்ச்சைக்குரிய அச்சுதானந்தனுக்கு மாநிலக் குழுவில் இடம் அளிக்கப்படவில்லை.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் மீது மாநில செயலாளர் பினராய்விஜயன் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறினார்.

மாநாட்டில் நடந்த விவாதத்தில் அச்சுதானந்தன் மீது அடுக்கடுக்கான புகார்களை பட்டியலிட்டார். இதற்கு அச்சுதானந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தன் மீது கூறப்பட்ட புகார்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் கட்சி மாநாட்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அச்சுதானந்தன் கட்சி மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவரை சமாதானப்படுத்த அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனிடையே அம்மாநில கட்சியின் புதிய செயலாளராக மத்திய குழு உறுப்பினர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதுவரை செயலாளர் பதவியில் இருந்தவர் பினராய் விஜயன். அவர் 4 முறை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராக பதவி வகித்துள்ளார். அவருக்கும் அச்சுதானந்தனுக்கும் இடையே உச்சகட்ட மோதல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட மாநில குழு உறுப்பினர்கள் பட்டியலில் அச்சுதானந்தன் இடம் பெறவில்லை. எனினும் 88 பேர் கொண்ட அந்த பட்டியலில் ஒரு இடம் காலியாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அச்சுதானந்தன் கட்சியில் செயலாற்ற திரும்பிவந்தால் அவருக்கு குழுவில் இடமளிக்கும் வகையிலேயே அந்த ஒரு இடம் காலியாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1964 ஆம் ஆண்டு முதன்முதலாக மாநில குழு அமைக்கப்பட்டபோது அச்சுதானந்தன் அதில் உறுப்பினராக இருந்தவர். இதனிடையே அச்சுதானந்தனை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு மத்திய குழுவை கேரளா மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications