கொல்கத்தாவில் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு
கொல்கத்தா: கொல்கத்தாவில் புர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் முன்பு திங்கட்கிழமை மாலை குண்டுவெடித்தது.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி தேசிய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் புர்த்வான் கிளை தலைவர் சாஜித் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் முகாமில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகம் வாசலில் யாரோ வெடிகுண்டை வீசியுள்ளனர். மாலை 6.30 மணிக்கு குண்டுவெடித்தபோதிலும் நல்லவேளையாக இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. இந்த சம்பவம் பற்றி உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை செய்யும் தங்களை குறி வைத்து தான் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று தேசிய புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய புலனாய்வு துறையினர் புர்த்வான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்புடைய 40 வெடிகுண்டுகளை கடந்த மாதம் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications