செமினார் ரூமின் கதவில் "சீக்ரெட்".. பெண் டாக்டரையே முறைத்து பார்த்த சஞ்சய் ராய்.. வீடியோ வந்துருச்சு
கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கில், கதவை இணைக்கும் போல்டு உடைந்திருக்கும் கருத்தரங்கு அறையில் எவ்வாறு குற்றம் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது சிபிஐ.
கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரத்தில், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன... உயிரிழந்த பெண்ணுக்காக நீதி கேட்டு மருத்துவர்களின் போராட்டம் விரிவடைந்து வருகிறது. அதேசமயம் பல்வேறு சந்தேகங்கள் தினம் தினம் இந்த வழக்கில் கிளம்பி பரபரப்பை தந்துவருகின்றன.

அந்தவகையில் தற்போது 2 விதமான சந்தேகங்கள், ஆர்ஜி கர் மருத்துவமனையை சுற்றி வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன.. முதலாவதாக, கொலை செய்யப்பட்ட தங்கள் மகளின் செல்ஃபோனை ஆய்வு செய்தால், முக்கிய ஆதாரம் கிடைக்கும் என்று பெண் டாக்டரின் பெற்றோர்கள் கூறியிருக்கிறார்கள்.
செல்போன்: இதுகுறித்து அவர்கள் சொல்லும்போது, எங்கள் மகளின் செல்போனின் பேட்டர்ன் என்னவென்று தங்களுக்கு தெரியவில்லை.. அதனால், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு அதனை திறந்து ஆய்வு செய்தால், அதில் நிறைய ஆதாரங்கள் கிடைக்கும்.. மகளின் மரணத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளியை காப்பாற்றுவதற்காக, அனைத்து ஆதாரங்களுமே மறைக்கப்பட்டுள்ளன. உண்மையான குற்றவாளி வெளியே சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறார்.
எனவே எங்கள் மகளின் செல்போனை ஆய்வு செய்தால் உண்மையான குற்றவாளி யார் என்பதற்கான ஆதாரம் தெரிய வரும்" என்று உறுதியாக சொல்கிறார்கள் பெற்றோர்.
செமினார் ரூம்: இதுவொருபுறமிருக்க, மருத்துவமனையின், செமினார் ரூமின் கதவு, இணைக்கப்பட்டிருக்கும் போல்டு உடைந்து காணப்படுகிறது.. இதைதான் சிபிஐ முக்கிய ஆதாரமாக கையில் எடுத்தள்ளது..
எதற்காக இந்த போல்ட்டு உடைந்திருக்கிறது? ஒருவேளை செமினார் ரூமில் குற்றம் நடந்திருந்தால், யாராவது ஒருவர் ரூமுக்கு வெளியே நின்றுக்கொண்டு, உள்ளே நுழைந்துவிடாமல் காவல் காத்திருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். அதனால், சிசிடிவி காட்சிகளை கொண்டு, இதை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் இறங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
சந்தேகம்: இன்னொரு சந்தேகமும் சிபிஐக்கு எழுந்துள்ளது.. ஒருபெண்ணை இவ்வளவு கொடூரமாக துன்புறுத்தி பலாத்காரம் செய்து கொல்லும்போது, அந்த பெண்ணின் அலறல் சத்தம் எப்படி யாருக்குமே கேட்காமல் போயிற்று? அதுவும் விடிகாலை நேரத்தில், மருத்துவமனையே நிசப்தத்தில் இருக்கும்போது, பெண்ணின் அலறல் சப்தம் ஏன் யாருக்குமே கேட்கவில்லை? என்று சிபிஐ அதிகாரிகளுக்கு குழப்பமாக உள்ளது.
செமினார் ரூம் கதவின் போல்ட்டு உடைந்திருக்கிறது.. அப்படியானால், ரூம் கதவை முழுமையாக சாத்த முடியாது.. அப்படியிருந்தும், பெண்ணின் கதறல் வெளியே யாருக்குமே தெரியவில்லையே ஏன்? என்ற சந்தேகமும் சிபிஐக்கு எழுந்துள்ளது.
விசாரணை: அப்படியானால், தாழ்ப்பாள் போட முடியாத கதவை கொண்ட செமினார் ரூமில்தான் குற்றச்செயல் நடந்ததா? யாராவது இந்த குற்றத்துக்கு உதவினார்களா? என்பது குறித்த விசாரணையில் சிபிஐ இறங்கியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, உயிரிழந்த பெண் டாக்டர், இந்த செமினார் ரூமுக்குள் அதிகாலை 2 மணியிலிருந்து 3 மணிக்குள் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த டியூட்டி மருத்துவர், செமினார் ரூமில், பெண் டாக்டர் தூங்கி கொண்டிருப்பதையும் பார்த்துள்ளார்.
செமினார் ரூம்: அதாவது செமினார் ரூம் கதவை தாழ்ப்பாள் போடாமல்தான், பெண் டாக்டர் தூங்க சென்றுள்ளார்.. இப்படி தாழ்ப்பாள் கதவு ஏற்கனவே உடைந்திருந்தது, ஜூனியர் டாக்டர்கள் எல்லாருக்குமே தெரியுமாம். அதனால்தான் பெண் டாக்டர் கதவை தாழிடவில்லை என்கிறார்கள்.
இதனிடையே இன்னொரு முக்கியமான சந்தேகம் சிபிஐக்கு எழுந்துள்ளது.. அதாவது, கொலை நடப்பதற்கு முந்தைய நாள் 8ம்தேதி, கார்டியாலிஜி பிரிவு வார்டில் பணியில் பெண் டாக்டர் இருந்துள்ளார்.. அப்போது அவருடன் மேலும் 4 ஜூனியர் டாக்டர்கள் டியூட்டியில் இருந்திருக்கிறார்கள். இரவு 11 மணியளவில் சஞ்சய் ராயும், அவர்களுடன் இருப்பது சிசிடிவியில் பதிவாகியிருக்கிறதாம்.
என்ன காரணம்: அப்போது சஞ்சய் ராய் அந்த டாக்டர்களை பார்த்துகொண்டிருப்பதும், சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. இதையடுத்து, அந்த 4 டாக்டர்களில் யாராவது அன்றைய தினம், சஞ்சய் ராய் அங்கு இருந்ததை கவனித்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மறுநாள் ஆகஸ்ட் 9ம் தேதி அதிகாலை 1 மணிக்கு பெண் டாக்டர் செமினார் ரூமுக்குள் 2.30 மணிக்கு, ஜூனியர் டாக்டர் ஒருவரிடம் பேசியிருக்கிறார். இதுவே அவர் கடைசியாக இருந்த காட்சியாக பதிவாகியிருக்கிறது.
துரித விசாரணை: எனவே, அந்த ஜூனியர் டாக்டரிடம் சிபிஐ இதுகுறித்து விசாரித்திருக்கிறது. அதற்கு அவர், தன்னிடம் பேசிவிட்டு, தூங்க செல்வதாக கூறிவிட்டு போனாராம் பெண் டாக்டர். இதற்கு பிறகு 4 மணிக்குத்தான், சஞ்சய் ராய் மருதுவமனைக்குள் மறுபடியும் நுழைவது சிசிடிவியில் பதிவாகியிருக்கிறதாம்..
அந்தவகையில், மேற்கண்ட அனைத்து விதமான சந்தேகங்களையும் சிபிஐ தற்போது கையில் எடுத்துள்ளது, இந்த வழக்கின் விசாரணையை மேலும் பரபரப்புக்குள்ளாக்கி வருகிறது. ஆனால், கைதாகியிருக்கும் சஞ்சய்ராய் முகத்தில், இப்போதுவரை எந்தவிதமான பதட்டமும், பதற்றமும் தென்படவேயில்லையாம்.












Click it and Unblock the Notifications