"ஆதாரங்களை அழிக்க முயன்ற போலீஸ்.." கொல்கத்தா மருத்துவர் கொலை.. கண்ணீர் விட்டு கதறிய தந்தை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தைக் கொல்கத்தா போலீசார் ஆதாரங்களை அழிக்க முயல்வதாகப் பயிற்சி மருத்துவரின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரித்தனர். இருப்பினும், போலீசார் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிளப்பிய நிலையில், இந்த வழக்கு விசாரணையைக் கொல்கத்தா ஐகோர்ட் சிபிஐ தரப்பிற்கு மாற்றியது.
விமர்சனம்: இந்தச் சூழலில் பயிற்சி மருத்துவர் கொலையில் ஆதாரங்களை போலீசார் மறைத்துவிட்டதாக உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஜாதவ்பூர் பகுதியில் நடந்து வரும் போராட்டங்களில் கலந்து கொண்ட உயிரிழந்த மருத்துவரின் தந்தையும் உறவினர்களும் போலீசார் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பேசிய மருத்துவரின் உறவினர், "கொல்கத்தா போலீசாரும் கல்லூரி நிர்வாகமும் இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயல்கின்றன. ஏன் அவர்கள் எப்போதும் ஆதாரங்களை மறைக்கவே முயல்கிறார்கள்? அவரது உடலைப் பார்க்கக் கூடப் பெற்றோரை உடனடியாக அனுமதிக்கவில்லை. சுமார் நான்கு மணி நேரம் காக்க வைத்துள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது.
அனுமதிக்கவில்லை: மேலும், குற்றம் நடந்த அந்த செமினார் ஹாலுக்குள் பெற்றோரைக் கடைசி வரை அனுமதிக்கவில்லை ஏன்? குற்றம் நடந்த இடம் என சொன்னால் யாரையும் அனுமதித்து இருக்கக்கூடாத. ஆனால், பலர் செமினார் ஹாலுக்குள் சர்வ சாதாரணமாக சென்றுவிட்டு வெளியே வந்தனர். அவர்களை எல்லாம் அனுமதித்த போலீஸ் பெற்றோரை மட்டும் அனுமதிக்க மறுத்தது ஏன்.. இந்த கொடூர சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது..
எதையோ மறைக்கவே அவசர அவசரமாக அனைத்தையும் செய்கிறார்கள். போலீசாரே இதுபோல செய்தால்.. நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவோம். பயிற்சி மருத்துவர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும்" என்றார்.
கதறிய தந்தை: அதேபோல அவரது தந்தையும் கொல்கத்தா போலீசாரை விமர்சித்தார். மகளின் மரணத்தால் தனது குடும்பமே சிதைந்து போய்விட்டதாகக் கூறிய அவர், ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எல்லாம் ஒரே நாளில் முடிந்துவிட்டது. எங்கள் கனவுகள் சிதைந்துவிட்டன. மருத்துவ மாணவர்களின் போராட்டம் எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன். உங்களின் போராட்டம் தான் எங்களுக்கு வலிமையைத் தருகிறது" என்று கண்ணீருடன் கூறினார்.
என்ன நடந்தது: கடந்த மாதம் 9ம் தேதி பயிற்சி மருத்துவரின் உடல் ஆர்ஜி கர் மருத்துவமனையில் உள்ள செமினர் ரூமில் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அடுத்த நாள் இந்த வழக்கில் கொல்கத்தா போலீதார் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
முதலில் பயிற்சி மருத்துவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தகவல் பரவியது. இருப்பினும், சிபிஐ அதிகாரிகள் கூட்டுப் பலாத்காரம் இல்லை என்று கூறியுள்ளனர். சஞ்சய் ராய் மட்டுமே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications